• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

விஜய் படத்தை தயாரிக்கிறாரா தோனி?

ByA.Tamilselvan

Oct 12, 2022

கிரிக்கெட் வீரர் தோனி “தோனி என்டர்டைன்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகர் விஜய் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.
விஜய் தற்போது நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். குடும்ப பின்னணி படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி, கிரிக்கெட்டை தாண்டி ‘தோனி என்டர்டைன்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ‘ரோர் ஆஃப் லயன்’ என்ற ஆவணத்தொடர் உள்ளிட்ட சில படைப்புக்களை தயாரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் முதல் முறையாக அனிமேஷன் ஸ்பை தொடராக உருவாகும் ‘கேப்டன் 7’ என்ற சீரிஸை தயாரித்து வருகிறது.
மகேந்திர சிங் தோனி, தற்போது தமிழில் ஒரு திரைப்படம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் தான், விஜய் நடிக்கவுள்ளதாகவும் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதோடு, விஜயுடன் சேர்ந்து தோனியும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக விஜய், சில மாதங்களுக்கு முன்பு விளம்பர படப்பிடிப்பிற்காகச் சென்னை வந்த தேனியை நேரில் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.