• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு

ByA.Tamilselvan

Aug 8, 2022

தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நிறைவு விழா ஆகஸ்டு 9-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 157 ஓட்டுகள் கிடைத்தன. அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.