

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே புத்தூர் பகுதியில் நேற்று நள்ளிரவு கோவில் திருவிழாவின் போது, ஒரு தரப்பினர் வைத்திருந்த பேனர் மீது கார் மோதியதாக கூறி, பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சாலையில் பிளக்ஸ் போர்டு வைத்திருந்ததால், பிளக்ஸ் போர்டு மீது, கார் மோதாமல் இருக்க கார் ஓட்டுநர் ஓரமாக சென்றுள்ள சிசிடி கேமராவும் காட்சி வெளியாகி உள்ளது. இந்த நிலையில் காரை இயக்கியவர்கள் தங்கள் வைத்திருந்த பிளக்ஸ் போர்டு மீது இடித்து விட்டு அந்த புறமாக சென்று காலால் எட்டி உதைத்ததாக, மற்றொரு தரப்பினர் புகார் கூறி, வீடு புகுந்து காரை ஒட்டி சென்ற நபர் மீது தாக்கியதாகவும், அதில் கருமலைபாண்டியன் வயது 42, அவரது மனைவி கற்பகவள்ளி வயது 36 ஆக இருவரும் காயமுற்றுதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீடு புகுந்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஒரு தரப்பினர் புத்தூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற தளவாய்புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தி பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தளவாய்புரம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து ஒரு தரப்பினர் மீத 6 பேர் மற்றொரு தரப்பினர் 6 பேர் என மொத்தம் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

