• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முன்னாள் மாணவர்கள் இணைந்து மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம்..,

ByP.Thangapandi

Jun 12, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளி, கடந்த இரு ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறது.

பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவ மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம் அப்பள்ளியில் பயின்ற 78 கிட்ஸ் முன்னாள் மாணவர்கள் என்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண் எடுத்த கிருஷ்ணக்குமார், சுவிதா, யுவஸ்ரீ என்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கத் தொகையுடன் விருதுகளையும், மரக்கன்றுகளை வழங்கி ஊக்கப்படுத்தினர்.

அரசு பள்ளியின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், முன்னாள் மாணவர்கள் இணைந்து மாணவ மாணவர்களை கௌரவ படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.