• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்..,

ByRadhakrishnan Thangaraj

Jun 12, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேல ஆவரம்பட்டி பகுதியில் ஒரு தரப்பினர் கோவில் திருவிழா கொண்டாடியுள்ளனர். அருகே மற்றொருத்தரப்பை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

கோவில் திருவிழாவிற்கு முன்னதாக அந்த பகுதியில் அமைந்துள்ள கோவிலின் அருகே தினந்தோறும் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சந்தித்து தவறான செயலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கோவில் திருவிழா முடிந்த நிலையில் அந்த கோவில் பகுதியில் பெண்ணும் ஆணும் தவறாக ஈடுபட்டதை பார்த்த மற்றொரு தரப்பினர் தட்டி கேட்டுள்ளனர் கோவில் வளாகத்தில் இதுபோன்று செய்வது தவறு என கூறியுள்ளனர்.

அதை பொறுப்பெடுத்தாமல் சென்ற அந்த இளைஞர் அவர் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த அவருடைய நண்பர்களை அழைத்துக் வந்து கோவில் அருகே வாக்குவாதத்தில் ஈடுபட்டு சிசிடி கேமராக்களை உடைத்து பிரச்சனை செய்ததில் இருதரப்பினுடைய மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் திருட்டுத்தனமாக காதலில் ஈடுபட்ட அந்த நபர் சார்ந்த சமுதாயத்தினர் சிலர் வீடுகளை உடைத்து தாக்கியுள்ளனர். இதில் சிலரை காயப்படுத்தி உள்ளனர்.

இதில் 4 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இராஜபாளையம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றொரு தரப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட்டோர் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையில் ஈடுபட்டு போராட்டத்தில் நள்ளிரவில் ஈடுபட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.