• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டரின் முக்கிய அறிவிப்பு..!

Byவிஷா

Sep 3, 2022

கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மானிய விலையில் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்கத் திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகளை கால்நடை தீவன பயிர் உற்பத்தியாளர் என்ற நிலையில் தொழில் முனைவோராக்கும் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தீவனப் பற்றாக்குறையை போக்கவும் பசுந்தீவன உற்பத்தியை பெருக்கும் நோக்கத்திலும் ஒவ்வொரு வருடமும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தீவன பயிர் அறுவடை இயந்திரம் மற்றும் தீவனப் பயிர் புல் கட்டுகள் தயாரிக்கும் இயந்திரம், டிராக்டர் ஆகியவற்றை 25சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தில் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுகிறது. இந்த உபகரணங்களில் மொத்த விலை 42 லட்சம் ரூபாய். இதில் பயனாளியின் பங்குத்தொகை 31.5 லட்சம் போக 10.5 லட்சம் ரூபாயை அரசு மானியமாக வழங்குகின்றது. இந்த திட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள், பால் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் சுய உதவி குழுவினர் விவசாய உற்பத்தி குழுக்கள் ஆகியவை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.