• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

8 விவசாயிகளை காவு வாங்கிய உத்தரபிரதேச வன்முறை!…

Byadmin

Oct 4, 2021

உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்திற்க்கு துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகையை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம். இந்த போராட்டம் எதிர்பாராத விதமாக வன்முறையாக மாறியது.

இதில் அமைச்சர் மிஸ்ராவின் கார் ஏறி இறங்கியதில் 3 விவசாயிகள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்த வன்முறைக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி, ‘உ.பி. விவசாயிகள் போராட்டத்தில் மனிதத்தன்மையற்ற படுகொலை நிகழ்ந்திருப்பதை கண்ட பின்பும் ஒருவர் அமைதி காத்தால் அவர் செத்துப்போனதற்குச் சமம்’ என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.