• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

‘கிராண்ட் சிட்டி’ பிரீமியம் குடியிருப்பு திட்டம் அறிமுகம்..,

BySeenu

Mar 6, 2026

KG Group நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான TNCD , தனது புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான ‘கிராண்ட் சிட்டி’ யை கோவை சத்திய ரோடு, கணபதி பகுதியில் அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தை TNCD இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார், உதவி துணைத் தலைவர் யுவராஜ், மற்றும் மூத்த மார்க்கெட்டிங் மேலாளர் ஜோஷுவா ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

இது குறித்து சஞ்சனா விஜயகுமார் கூறுகையில்,

வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மையமாக உருவெடுத்து வரும் கணபதி – சரவணம்பட்டி ஐடி காரிடார் பகுதியில் அமைந்துள்ள ‘கிராண்ட் சிட்டி’, முன்னணி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் புரோசோன் மால் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அருகில் இருப்பதால், சிறந்த இணைப்பும் வசதியான நகர வாழ்க்கையும் ஒருங்கிணைந்த வாழ்வையும் வழங்கும் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் 1, 2 மற்றும் 3 BHK அபார்ட்மெண்ட்கள் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப திறமையான இடவசதி திட்டமிடலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டம் அதிகமாக கிடைக்கும் வகையில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வாஸ்து முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளில், சில 3 BHK வீடுகள் பொதுச் சுவர் இல்லாமல் தனியுரிமை அம்சத்துடன் வழங்கப்படுகின்றன. மேலும், EV சார்ஜிங் வசதி மற்றும் ஸ்மார்ட் ஹோம் அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

குடியிருப்பாளர்களுக்காக குழந்தைகள் விளையாட்டு பகுதி, கசீபோ அமர்வு, அழகிய தோட்டம், ஜிம் மற்றும் பார்ட்டி லான் உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை முறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அறிமுக விலை & சிறப்பு சலுகை:

2 BHK – ₹59.99 லட்சம்

3 BHK – ₹77.99 லட்சம்

மேலும் மார்ச் 8 வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச EV பைக் வழங்கப்படும் சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை தொடர்புக்கு:
76676 99999 | 76674 66666