• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் ஊராட்சிக்கு குப்பை சேகரிக்கும் வாகனம்..,

ByK Kaliraj

Jul 21, 2026

சிவகாசி அருகே நாரணாபுரம் முதல்நிலை ஊராட்சியில் நாரணாபுரம், நாரணாபுரம் புதூர், போஸ் காலனி, பர்மா காலனி உட்பட ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 20ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு தினமும் டன் கணக்கில் குப்பைகள் அள்ள வேண்டிய கட்டாயம் உள்ள சூழ்நிலையில் அதற்கான போதிய துப்பரவு பணியாளர்களும் வாகன வசதியும் இல்லாத நிலை உள்ளது. இந் நிலையில் ஊராட்சி பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் வகையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிவகாசி காளீஸ்வரி பட்டாசு ஆலை நிறுவனத்திடம் சமுதாய மேம்பாட்டு நிதியில் இருந்து குப்பை வண்டி கேட்டு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இதனை பரிசீலனை செய்த காளீஸ்வரி நிறுவன நிர்வாக இயக்குநர் ஏ.பி.செல்வராஜன் அவர்கள் ரூ.2லட்சத்து 35ஆயிரம் மதிப்புள்ள குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் வழங்கினார். இதனை ஊராட்சி செயலாளர் ஜெகதீஸ்வரி பெற்றுக் கொண்டார். இந்த குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனத்தை சிவகாசி யூனியன் ஆணையாளர் பாண்டிஸ்வரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.