• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே சாலை அமைக்கப் படாமலே சாலை அமைத்ததாக முறைகேடு-கிராம மக்கள் குற்றசாட்டு..,

ByP.Thangapandi

Jul 2, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்திலிருந்து ஆனையூர் கிராமம் வரை உள்ள மண் சாலையை தார் சாலை அமைக்க கோரி இரு கிராம மக்களும் கடந்த 6 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.,

இந்நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டே பூதிப்புரம் முதல் ஆனையூர் வரை சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டதாக அருகில் உள்ள கட்டக்கருப்பன்பட்டி கிராமத்தில் கல்வெட்டு வைத்ததை அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.,

சாலை அமைக்கப்படாமலேயே சாலை அமைத்ததாக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டி இன்று பூதிப்புரம் மற்றும் ஆனையூர் கிராம மக்கள் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.,

தகவலறிந்து செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி மற்றும் கதிரவன், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி., பூதிப்புரம் ஆனையூர் கிராம சாலையில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் சாலை அமைக்க முடியாத நிலை நீடித்தாகவும், அந்த தொகையின் மூலம் அருகில் உள்ள ஆனையூர் கட்டக்கருப்பன்பட்டி இணைப்பு சாலையை அமைத்துள்ளதாகவும்., விரைவில் பூதிப்புரம் ஆனையூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.,