• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் கிராம பொதுமக்கள் முற்றுகை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் திருவேடகம் ஊராட்சிக்கு உட்பட்டநெடுங்குளம் பழைய காலணி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடி தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதைமீட்க கோரி பொதுமக்கள் தாலூகா அலுவலகத்தில் ஒன்று திரண்டு முற்றுகையிட்டு வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரவேலிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில்கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் தற்போதுஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டுள் ளது. அதனால் பழைய அங்கன்வாடி கட்டிடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து இடித்து வீடு கட்ட முயற்சி செய்து வருகிறார்.அதை அந்த ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர். இதில் புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் விஜயகுமார், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் லட்சுமணன், அலங்கை ஒன்றிய செயலாளர் வெற்றி குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன் இளைஞரணி செயலாளர் சரவணன் மற்றும் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் வந்திருந்தனர்.