• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு..,இஸ்ரோ அறிவிப்பு..!

Byவிஷா

Aug 22, 2023

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து. ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் ஏவியது . விண்ணில் செலுத்தப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்றும் பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டரில் உள்ள நிலவை அடைய சந்திரயான் விண்கலத்திற்கு 40 நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நிலவில் தரையிரங்கிய பின்னர் நிலவின் தென் பகுதியில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சந்திரயான்-3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வருகிற 23ம் தேதி சரியாக மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்குகிறது.
இந்த நிலையில் விக்ரம் லேண்டர் நாளை நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காணலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. அதாவது நாளை மாலை 5.27 மணி முதல் நேரலை ஒளிபரப்பு தொடங்கிவிடும் என தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.isro.gov.in/ என்ற இணையதளத்திலும், இஸ்ரோவின் யூடியூப், முகநூல் மற்றும் டிடி நேசனல் டிவி உள்ளிட்டவற்றில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.