
மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் நேற்று 1670 மருத்துவ இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதல் சுற்று கலந்தாய்விற்கு பிறகு அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள 1670 மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வுக்கு தகுதியானவர்கள் நேற்றும் இன்றும் இணையதளங்களில் பதிவு செய்யலாம். இதில் 119 எம்.பி.பி எஸ் இடங்களும், 85 பி.டி.எஸ் இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 648 எம்.பி.பி.எஸ் இடங்களும் 767 பி.டி.எஸ் இடங்களும் காலியாக உள்ளன.
இதன் பின்னர் ஆகஸ்ட் 24 காலை 10 மணி முதல் 28ஆம் தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்ய வேண்டும். பின் தரவரிசை அடிப்படையில் கல்லூரி இடங்கள் 29,30 தேதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. இது குறித்தான விண்ணப்பங்கள் 31 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். பின்னர் செப்டம்பர் 1 – 4 ஆம் தேதி வரை கல்லூரியில் சேர்வதற்கான ஆணையை இணையதளங்களில் மலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்பு இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் செப்டம்பர் 4ஆம் தேதி 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என்ற மருத்துவ தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
