• Tue. Apr 22nd, 2025

அதிவேக கார் ஓட்டுனர் சான்றிதழ் பெற்ற ஓட்டுநருக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்வசந்த் எம்.பி

டாட்டா நிறுவனம் தயாரித்த எலக்ட்ரிக் காரில் கடந்த (பெப்ரவரி)2ம் நாள் மதியம். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலான தூரம் ஆன 3800 கிலோ மீட்டர் தூரத்தை 76 மணி நேரம் 35 நிமிடங்களில் கடந்து (பெப்ரவரி28) அதிகாலை 2 மணிக்கு கன்னியாகுமரி சீரோ பாயின்ட் வந்து சேர்ந்த ஓட்டுநர் சிரிஸ் சந்திரனை(46)யை பாராட்டி இந்திய புக் ஆஃப் ரிக்கார்ட் நிறுவனம் அதிவேகமான "கார் ஓட்டுநர்" என்ற சாதனை சான்றை கொடுத்துள்ளது.

அதி வேகமான கார் ஓட்டுநர் என்ற பாராட்டைப் பெற்ற சிரீஸ்சந்திராவை. கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய நாதரின் தேவாலைய முற்றத்தில் வரவேற்று. இந்தியா புக் ஆஃப் ரிக்கார்ட்டின் பாராட்டு சான்றிதழை வழங்கியதுடன் அவரது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கன்னியாகுமரி மற்றும் நெல்லை.”டாட்டா”கார் விற்பனை நிறுவனமான டெரிக் டாட்டா கார் விற்பனை நிறுவனத்தின் அதிபரான ஸ்டான்லி, நிர்வாக இயக்குநர் டெரிக்ஸ்டாலின், பாராட்டு பெற்ற ஓட்டுநர் சிரீஸ் சந்திரனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

இந்த நிகழ்வில் டாட்டா கார் உற்பத்தி நிறுவனம் அதிகாரிகள் மற்றும் பல மாவட்டங்களை சேர்ந்த டாட்டா கார் விற்பனை ஏஜென்சி அதிபர்களும் பங்கேற்றார்கள்.