• Tue. Apr 22nd, 2025

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடியேற்றம்

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடியேற்றம் இன்று (மார்ச்_2)ம் நாள் காலை 8.30 கொடியேற்றம் நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோயில் எத்தகைய சிறப்பை பெற்றதோ,அதைப் போன்று,குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பெண்கள் இருமுடி கட்டி வந்து மண்டைக்காடு பகவதியை தரிசனம் செய்வதால், தொன்று தொட்டே இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்ற சிறப்புப் புகழ்பெற்ற பகவதி அம்மன் வழிபாடு கோவில்.
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை இன்று முதல் 10_நாட்கள் நடைபெறுகிறது.

குமரி மாவட்டம் மட்டுமே அல்லாது கேரள மாநிலத்தை சேர்ந்த பகவதி பக்த்தர்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் விழா நாட்களில் பகவதி அம்மனை தரிசனம் செய்வார்கள்.

விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பாரம் பரிய பூஜைகளின் வரிசையில் பெரிய சக்கர தீவெட்டி ஒடுக்கு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.

குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் முன் நின்று செயல்படுத்துக்கிறார்கள்.