நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தவெக சார்பில் வருகின்ற 2026 ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் வர வேண்டும் என்பதற்க்காக உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மார்க்கெட் திடலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.