


விஜய் கட்சியின் செயல்பாட்டை பார்த்த பின் தான், மக்களின் ஆதரவு விஜய்க்கு கிடைக்கும் என நாகர்கோவில் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்தார்.
நாகர்கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை பகுதிகளை சேர்ந்த மாநில தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், வட்டார, நகர, பேரூராட்சி, மாநகராட்சி பகுதியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் (மூ)தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தவை.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு கால அவகாசம் உள்ளது என்றாலும். தமிழ் மாநில காங்கிரஸ் இப்போதே அதற்கான ஆய்வு பணிகளை கிராமங்கள் நிலையிலே தொடங்கி விட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஒத்த கருத்துக்கள் உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். தேர்தலில் போட்டியிடுவது என்பது அப்போதைய சூழலை ஏற்று அமையும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆலோசனைக்கு மாநில கட்சி முதன்மை நிலைப்பாடு எடுக்குமா என்பது குறித்து இப்போதே கருத்துக்கள் கூறுவது சரியாக இருக்காது.

இந்தியாவில், தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அதில் எந்த தடையும் இல்லை. நீங்கள் ஒருவர் புதிதாக தொடங்கியுள்ள கட்சியின் தலைவர் பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள்.
புதிய கட்சிக்கு தமிழக வாக்காளர்கள் எத்தகைய ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை பொருத்தே வெற்றியும், தோல்வியும் அமையும். இதனால் தான் வாக்காளர்களே இறுதி எஞமானர்கள் என்ற கருத்தின் உண்மை நிலை.
திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றததால், மக்கள் அதை பற்றிய சிந்தனைக்கு சென்று விடக்கூடாது என்பதால், மடைமாற்ற மூன்று மொழி, தொகுதி மறுசீரமைப்பு என்ற வாதங்களை எழுப்பி வருகின்றனர்.

டாஸ்மாக்கை 24_மணிநேரமும் திறந்து வைத்து கஜானாவை நிறப்புகிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது ஒரே நாளில் நடந்த எட்டு நிகழ்வுகள், வழிப்பறி, செயின் அறுப்பு என்ற குற்றங்கள்.
ஆளுநரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவரே என்பதே நீதிமன்றத்தின் தீர்ப்பு. இது குறித்து பேச வேறு ஒன்றும் இல்லை. வக்ப் வாரியத்தின் திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு உதவி செய்யும் சட்டதிருத்தோம். இந்த திருத்த சட்டத்தின் மூலம் ஏழை இஸ்லாமிய பெண்கள் பயன் பெற்றுள்ளார்கள் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கட்சியின் மாநில செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடியல் சேகர், மகாலிங்கம்,குமரி மாவட்டம் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநகராட்சி உறுப்பினருமான டி.ஆர். செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

