

மகாவீரர் ஜெயந்தி இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்காக தமிழகத்தில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

மகாவீரர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல்_10)ம் நாள். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ் நாடு மாநில வாணிப்பக் கழக மதுபானக் கடைகள் மற்றும்FL1,FL 2,FL 3,FL3A மற்றும்FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.


