• Tue. Apr 22nd, 2025

நவீன கட்டணத்தில் மருத்துவம்..,

நாகர்கோவிலில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் ரூ.65 கோடியில் புதிய கட்டிடங்களை கட்ட திட்டமிட்டு நடைபெற்ற பணியில்,முதல் கட்டமாகயூ.41 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

இந்த புதிய கட்டிடங்கள் வரிசையில். நாகர்கோவிலில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் முதல் முதலாக ரூ.ஒண்ணேகால் கோடியில்,அதி நவீன கட்டண படுக்கை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 20 படுக்கைகள் கொண்ட அறைகள் உள்ளன.

இந்த நவீன கட்டண படுக்கை அறையில் தங்கி மருத்துவம் பெறும் நோயாளிக்கும்,உடனிருப்போருக்கும் தனி படுக்கை வசதி,ஒரு ஷோபா செட்,பீரோ, ஹீட்டர் வசதியுடன் கூடிய குளியலறை,கழிவறை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் (ஏப்ரல்_11)ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இது போன்ற கட்டண வசதி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனையில் அண்மையில் திறக்கப்பட்டது. நாகர்கோவில் இன்று முதல் பயன் பாட்டிற்கு வருவதாக, தமிழக நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பரமணியம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அமைச்சர் மேலும்,
இந்தியாவிலேயே மலைப்பகுதிகளில் “சிம்லாவுக்கு” அடுத்தப்படியாக தமிழகத்தில் ஊட்டியில் தான் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.,பொது சபை கூட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை வியந்து பார்த்து கடந்த ஆண்டு ஒரு விருதை தமிழ் நாட்டுக்கு வழங்கியுள்ளதை குறித்தும் அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்வில் குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஸ்பலீலா ஆல்பன், மருத்துவ கல்லூரி முதல்வர் ராமலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.