”விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்” என்று தெரிவித்துள்ளார் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட 129 பேர் நிர்வாகிகளை வெற்றியடைய செய்த மக்களுக்கு நடிகர் விஜய் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிபெற்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறினார்.
மத்திய மாநில அரசிடம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு மக்களுக்கு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என நடிகர் விஜய் அறிவுறித்தினார்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்த 11 அம்சம் கொண்ட திட்ட படிவத்தை அளித்துள்ளதாகவும் இயக்கத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது தளபதி உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்தார்.