• Fri. Mar 29th, 2024

கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தனி ரேஷன் கார்டு

Byமதி

Oct 26, 2021

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெற குடும்ப தலைவரின் அனுமதி தேவை இல்லை என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

கணவனால் கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்ணின் பெயர் கணவருடை குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள காரணத்தினாலும், மனைவியின் பெயரை நீக்குவதற்கு கணவர் முன்வராத காரணத்தினாலும், நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலும் அப்பெண்மணியின் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், ஒரு பெண்மணி கணவரால் கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசித்துவரும் நிலையில், அவரது ஆதார் எண் மூலம், சம்மந்தப்பட்ட பெண் தனியாக வசித்து வருதை உறுதி செய்து, எழுத்துப்பூர்வ வாக்குமூலம் பெற்று, சம்மந்தப்பட்ட அலுவலர், சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயரினை குடும்ப அட்டையிலிருந்து நீக்கி புதிய அட்டை வழங்க வேண்டும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *