• Sun. Apr 19th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

முன்பதிவின்றி பயணிக்கலாம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு…

Byமதி

Oct 25, 2021

கொரோனா காரணமாக ரயில்வே துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தற்போது நோய் தொற்று குறைவு காரணமாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், நவம்பர் 1ஆம் தேதி முதல் முன்பதிவு இன்றி பயணிகள் பயணிக்கலாம், அதாவது தேவைப்படும் போது ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் உடனுக்குடன் டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘நவம்பர் 1 ஆம் தேதி முதல் ரயில்களில் மீண்டும் முன்பதிவின்றி பயணிக்கலாம்’ என்று அறிவித்துள்ளது. இதன்மூலம், கொரோனா காரணமாக முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.