2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் போட்டியிட வலியுறுத்தப்படும். பல்லடத்தில் நடைபெற்ற தேர்தல் கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த 63 வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணி தலைவர் செல்வக்குமார் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தினேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் நடைபெற்ற கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வேட்பாளராக போட்டியிட வலியுறுத்தப்படும். பல்லடம் தொகுதி 44 பகுதிகளாக பிரித்து 44 பகுதியிலும் படிப்பகம் மற்றும் மக்கள் சேவை மையங்கள் உள்ளடக்கிய கட்சி அலுவலகம் நிறுவப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.