திருப்பூர் மாநகரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஒன்பது பேர் சேர்ந்து திருப்பூர் பெருமாநல்லூர் அருகில் உள்ள பொககு பாளையம் என்னும் பகுதியில் குட்டையில் குளிப்பதற்காக சென்றனர். சென்ற மாணவர்களில் 14 வயது நிரம்பிய அஜய் என்ற சிறுவன் தவறி விழுந்து பரைகுளில் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையும், தீயணைப்புத் துறையும் விடிய, விடிய தேடும் பணியில் ஈடுபட்டு சிறுவனின் உடலை மீட்டெடுத்தனர் உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்கும் வண்ணம் இருந்தது.