VHN’s, SHN’s, CHN’s கூட்டமைப்பு சார்பில் இன்று விருதுநகர் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முடிவு செய்யப்பட்டது.
அவை, கொரானா தடுப்பூசி முகாம் ஞாயிற்று கிழமை நடத்துவதை மாற்றியமைக்கக்கோரியும், முகாமை
5 மணிக்கு நிறைவு செய்யக் கோரியும்,
மருத்துவ வழிகாட்டலுக்கு மாறாக நடைபெறும் வீடு தேடி சென்று கொரானா தடுப்பூசி போகும் திட்டத்தை கைவிடக்கோரியும், அனைத்து Vhns, shns, chns களுக்கும் ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டியும், CHN களுக்கு 50% அடிப்படையில் தாய் சேய் நல அலுவலர் பதவி உயர்வு வழங்குக கோரியும், துனை சுகாதார மையங்களுக்கு செவிலியர்கள் நியமனம் செய்வதை கைவிட வேண்டியும்,
சுகாதாரா ஆய்வாளர்களுக்கு வழங்குவதை போன்று VHN களுக்கு Grade 1 பதவி உயர்வு வழங்கக்கோரி கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து, 19.11.21 அன்று காலை 10 மணிக்கு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி 23.11.21 அன்று காலை 10 மணிக்கு சென்னை DPH அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.