மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக, திருப்பரங்குன்றம் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி வார்டு எண் 99 பகுதியில் உள்ள தியாகதீபம். அமரர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் ஜவஹர்லால் நேருஜீ அவர்களின் 132வது பிறந்த நாள் கடந்த 14/11/2021ம் நாள் காலை 10 மணியளவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.
மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பி எஸ் சண்முகநாதன் தலமையில், 99வது வார்டு தலைவர் டைகர் சுப்பிரமணியன், மனித உரிமை துறை ஆர்.எம்.மணி, வி.சின்னாத்தேவர் ஆகியோர் முன்னிலையில் ஜவஹர்லால் நேரு திருஉருவப்படமும், அன்னை இந்திராகாந்தி அவர்களின் திருஉருவப்படமும், தியாக தீபம் ராஜீவ்காந்தி அவர்களின் திருஉருவப்படமும் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 99வது வார்டு மகளிர் அணி தலைவி எஸ்.மச்சவள்ளி அவர்கள் மகளிர்களுக்கும் குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கினார்.