சிவகாசி அருகே தாயில்பட்டியில் தனியார் மருத்துவமனை தவறான சிகிச்சை காரணமாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் இந்த ஊரைச் சேர்ந்த அல்லி என்ற பெண்மணி தாயில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தவறான சிகிச்சை காரணமாக உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் அவரும் அவர் குடும்பத்தினரும் தனியார் ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினர் .
சம்பவம் அறிந்து வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர்கள் செண்பகவேலன் குருநாதன், மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.