மத்திய அரசு கொண்டு வந்துள்ள மீன்வள மசோதவை திரும்ப பெற வேண்டும் என கன்னியாகுமரில் கோரிக்கை வலுத்துவருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை புனித இனிகோ கலையரங்கத்தில் கோட்டையை தட்டும் குரல் முழக்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், வன்னியருக்கான 10.5 சதவீத தனி ஒதுக்கீட்டை ரத்து செய்து 20 சதவீத ஒதுக்கீட்டை MBC- க்கு பொதுவாக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதில் பல்வேறு மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள், அருட் தந்தையர்கள், அருட் கன்னியர்கள் பங்கேற்றனர்.