

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பட்டாப்புளி தெருவில் உள்ள மின் மாற்றியில் தொடர்ந்து பழுது ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மின் மாற்றியில் ஏற்படும் பழுதை நீக்காத காரணத்தால் இன்று மதியம் மின் மாற்றியில் இருந்து அதிக மின் அழுத்தம் ஏற்பட்டு அந்த மின் மாற்றியில் இருந்து மின் வின்யோகம் செய்யப்பட்ட வீடுகளில் இருந்த 20க்கும் மேற்பட்ட டீவி, வாஷிங் மிசின், மின் விசிரிகள், டியூப் லைட் மற்றும் மின் இணைப்பின் மீட்டர் போன்ற சாதனங்கள் வெடித்து சிதறி சேதம் அடைந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பெரியகுளம் மின்வாரிய அலுவலகத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் மின்வாரிய ஊழியர்கள் பார்வையிட்டு மின் மாற்றியை மாற்றிட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிக மின் அழுத்ததால் சேதம் அடைந்த மின் சாதனப் பொருட்களுக்கு மின் வாரியம் உரிய இழப்பீடு தரவேண்டும் எனவும் பாதிகப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

