திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் இன்று (22-ம் தேதி) ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் அவற்றை தேவஸ்தானத்தின் http://tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளாலாம்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 2-ம் தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு, 11-ம் தேதி வரையிலான 10 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த தரிசனத்திற்கு ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் டிக்கெட்கள் இன்று (22-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதற்காக ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ஒரு பக்தர் 10 ஆயிரம் ருபாய் நன்கொடையாக அளித்து 300 தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு ஜெய விஜய துவார பாலகர்கள் சிலை வரை மட்டும் அனுமதிக்கப்பட்டு மகா லகு தரிசனம் செய்து வைக்கப்படும். ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் தலா 10,000 ரூபாய் நன்கொடையும், டிக்கெட் கட்டணமாக தலா 300 ரூபாயும் செலுத்தி பக்தர்கள் அவற்றை தேவஸ்தானத்தின் http://tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளாலாம். எனவே, பக்தர்கள் இதனை கவனத்தில் வைத்து, நன்கொடை செலுத்தி வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.