விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி அருகே உள்ள வளையாபதி தெருவில் அமைந்துள்ள முனியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா கடந்த 27ம் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ஒன்பது நாள் நடைபெறும் பெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு பெண்கள் கும்மியடித்து வழிபாடு செய்தனர் .

எட்டாம் திருவிழாவாக இன்று 12 அடி 10 அடி அழகு குத்தி வழிபாடு செய்தனர் அதைத் தொடர்ந்து ஏராளமான பெண்களும் ஆண்களும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து
கோவிலில் சாமிக்கு பால அபிஷேகம் நடைபெற்றது .
முன்னதாக செண்பகத்தோப்பு போச்சி அம்மன் கோவில் மலையில் அமைந்துள்ள காட்டழகர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு கரகம் ஜோடிக்கப்பட்டு அம்மன் வீதி உலா நடைபெறும் நாளை தீர்த்த குடங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு பதினாறு வகையான திரவிய பொடிகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் செல்வராஜ் தலைவர் சுப்புராஜ் செயலாளர் ஜெகதீஷ் பொருளாளர் சக்தி கணேஷ் மற்றும் விழா கமிட்டி நிர்வாகிகள் ரமேஷ் கண்ணன் ராஜா கண்ணன் சதுரகிரி செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர் நாள்தோறும் பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டன.