
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பெரிய குளத்துப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வரும் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற இருக்கிறது.

விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கோவில் கமிட்டியினர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் அழைப்பிதழ் கொடுத்தனர். அழைப்பிதழை பெற்றுக் கொண்டு விழாவில் அவசியம் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற ரூபாய் 10,000 நிதி உதவி வழங்கினார். ஆனையூர் முன்னாள் பஞ்சாயத் தலைவர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டர் அருகில் இருந்தனர்.
