சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்தன், வெங்கடேசன் எம். எல். ஏ வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன்மாறன், செயல் அலுவலர் இளமதி, பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன், பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், சமயநல்லூர் டிஎஸ்பி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மணிகண்டன், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், பேரூராட்சி எட்டாவது வார்டு கவுன்சிலர் தொழிலதிபர் டாக்டர் மருதுபாண்டியன், திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், தொமுச செயலாளர் பாலசுப்பிரமணியன், முத்துக்குமரன் நகை மாளிகை இருளப்பன் என்று ராஜா ஆகியோர் தேர வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் மின்வாரிய பணியாளர்கள் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஜெனகை மாரியம்மன் கோவில் பணியாளர்கள் ஆகியோர் தேரோட்டம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்ந்து தேர் பெரிய கடைவீதி, தெற்கு ரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக தேர்நிலைக்கு வந்தது, தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஜெனகை மாரியம்மனை தரிசனம் செய்தனர். மேலரத வீதியில் பாஜக மாநில விவசாய அணி துணை தலைவர் மணி முத்தையா, பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் வள்ளி மயில், எட்டாவது வார்டு கவுன்சிலர் தொழிலதிபர் டாக்டர் மருது பாண்டியன், குடும்பத்தினர்கள் சார்பாக அம்மனை வரவேற்று மாம்பழங்கள் சூறையிட்டு, நீர்மோர் வழங்கி ஜெனகை மாரியம்மனை வரவேற்றனர்.

தொடர்ந்து கோவில் சார்பாக மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வட்ட பிள்ளையார் கோவில் நண்பர்கள் சார்பாக ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை சோழவந்தான் கூடை பந்தாட்ட தலைவர் தொழிலதிபர் டாக்டர் மருது பாண்டியன் தொடங்கி வைத்தார். அன்னதானத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர். தேரோட்ட விழாவில் திரௌபதி அம்மன் கோவில் தெரு மூலை கடை அருகில் முத்துக்குமரன் நகை மாளிகை உரிமையாளர் ராஜா என்ற இருளப்பன் சார்பாக பொதுமக்களுக்கு நீர், மோர், சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
