• Thu. Apr 25th, 2024

வைகையின் பெருமையைப் பறைசாற்றும் ‘வைகை பூங்கா’..!

Byவிஷா

Mar 7, 2023

மதுரையில் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள வைகையின் பெருமையைப் பறைசாற்றும் வகையில், வைகை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மதுரை மதிச்சியம் பகுதியில் உள்ள வைகை ஆற்றங்கரையின் அருகில், சுமார் 110 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்ட தமிழ் வைகை பூங்கா என்ற பூங்கா கட்டுப்பட்டு வருகிறது. இந்த தமிழ் வைகை பூங்காவில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள வைகை ஆற்றின் பெருமையையும், செழுமையையும் ஆற்றின் வர்ணிப்பையும், அழகையும், எடுத்துரைத்த இலக்கியங்களையும், அதை அழகாக எழுதிய புலவர்களை பற்றியும் இந்த பூங்கா முழுவதும் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பூங்கா முழுவதும் விதவிதமான பசுமையான மரங்களும் புல் தரைகளும் நீண்ட நடை பயிற்சி பாதைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பசுமையான மரங்களுக்கு இடையே மின் விளக்குகள் பொருத்தப்பட்டும் உள்ளது. இது இரவு நேரங்களில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா முழுவதும் கட்டி முடிக்கப்பட்டாலும், இப்பூங்காவில் சிறு சிறு வேலைகள் இருப்பதால் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. ஆனால் இப்பூங்காதிறக்கப்பட்டால் பெரியவர்களுக்கு இயற்கையான சூழ்நிலையில் நடை பயிற்சி மேற்கொள்ளவும் மக்கள் அனைவரும் வைகை ஆற்றின் பெருமையை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *