• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வாகை சுடவா 10ஆம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டம்!..

Byமதி

Oct 2, 2021

தேசிய விருது பெற்ற வாகை சூடவா திரைப்படம் வெளிவந்து பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
இந்த திரைப்படத்தை வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ரசிகப் பெருமக்கள், அதிலும் கல்லூரி மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதனைப் பார்த்து வாகைசூடவா குழு சார்பாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.

தேசிய விருது, மாநில விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் மற்றும் வெளிநாடுகளில் பல விருதுகள் அள்ளிக் குவித்த வாகை சூடவா திரைப்படத்தின் தயாரிப்பாளரான S. முருகானந்தம் அதில் நடித்த விமல், இனியா, இயக்குனர் சற்குணம், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், உடை வடிவமைப்பாளர் நடராஜன், எடிட்டர் ராஜாமுகமது போன்ற எல்லோரையும் ஒன்றிணைத்து ஜிப்ரான் ஸ்டூடியோவில் வைத்து கேக் வெட்டி கொண்டாடினர்கள்

எங்கள் வெற்றியில் துணை நின்ற அனைத்து ரசிகர்களுக்கும் எங்கள் வாகை சூடவா குழு சார்பாக மனமார்ந்த நன்றி என படக்குழுவினர் தெரிவித்தனர்.