• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

கவிஞருக்குப் பெண் பார்க்கும் நடிகர் கஞ்சா கருப்பு !

Byஜெ.துரை

Mar 2, 2026

திரைப்படங்களில் நாம் சிரிப்பதற்காகப் பார்க்கும் கஞ்சா கருப்பு நிஜ வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த நண்பராகத் திகழ்கிறார்.

அவர் தனது நண்பர் கவிஞர் கிச்சன் மீது வைத்துள்ள பாசம் அளப்பரியது. கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர். கவிஞர் கிச்சன் பல பாடல்களை எழுதிய திறமையான கவிஞர்.

“இலக்கிய காதலில் இலக்கண சுருதி “எனும் கவிதை தொகுப்பை தனது தாய் கிராமத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாகத் திரையுலகில் இணைபிரியாத நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

கஞ்சா கருப்பு எங்கு சென்றாலும் தனது நண்பர் கிச்சனை உடன் அழைத்துச் செல்வார். நண்பனின் வளர்ச்சியில் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. கவிஞர் கிச்சன் ஒரு எளிய பின்புலத்திலிருந்து வந்தவர். மிகவும் திறமைசாலி. ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தனது நண்பன் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பது கஞ்சா கருப்பின் நீண்ட கால ஆசை.

தனது நண்பன் கிச்சனுக்கு ஒரு நல்ல பெண்ணைத் தேடித் திருமணம் செய்து வைக்க கஞ்சா கருப்பு மிகத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

தனது சொந்தத் தம்பிக்கு எப்படிப் பெண் பார்ப்பாரோ அதே அக்கறையுடன் ஊர் ஊராகச் சென்று கிச்சனுக்குப் பெண் பார்த்து வருகிறார்.

என் நண்பன் ஒரு கவிஞன்.

அவன் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதே கஞ்சா கருப்பின் ஒரே நோக்கம். கஞ்சா கருப்பு ஒரு சாதிய வட்டத்தில் சுருங்காமல் சாதித்த பெண்ணை தேடுகிறார். ஆணின் தகுதிக்கு பெண் தகுதி… ஆண் பெண் பொருத்தம் மட்டும் தான்….தொழிலை வைத்து தான் சாதி பிறந்தது.

சாதி மத பேதமின்றி தனது நண்பனுக்கு மும்முறமாக மணபெண் தேடுகிறார் நடிகர் கஞ்சா கருப்பு.