ஆளும் மத்திய அரசுக்கு தனது முழு ஆதரவையும் கொடுத்து வருபவர்களில் முக்கியமானவர் நடிகை கங்கனா ரணாவத். இதனையடுத்து உத்திரபிரதேச அரசின் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தின் விளம்பர தூதராக நடிகை கங்கனா ரணாவத் நியமிக்கப்பட்டார்.

இது தொடர்பாக நேற்று நடிகை கங்கனா ரணாவத், முதல்வர் யோகிஆதித்யநாத்தை சந்தித்தார். அப்போது உ.பி. அரசின் பராம்பரிய தொழில் சார்ந்த மையங்களை உருவாக்கும் திட்டமான ஒரு மாவட்டம்,ஒரு தயாரிப்பு திட்டத்தினை (ஒ.டி.ஒ.பி) மக்களிடம் கொண்டு செல்லும் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார்.