- தமிழகத்தில் டெல்டா பகுதிகளுக்கும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.
- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா ஆகியோரை விசாரிக்க கோரிய வழக்கினை 4 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு.
- ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் சிசிடிவி கேமராகள் பொருத்தப்படும் – உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு அறிவிப்பு.
4.ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் வாங்கவில்லை என ஒன்றிய அரசு அறிவிப்பு.
- 1 முதல் 8ம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக மக்கள் பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- கூடலூரில் உள்ள மாசினக்குடியில் தொடர்ந்து அச்சுறுத்திவரும் புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வனத்துறை அதிகாரி உத்திரவு.
- தமிழகத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண் டெல்லியில் மர்மமான முறையில் மரணம்
- 2016 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் செய்ததாக வைகோ, திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
- நேரடியாக ஓடிடியில் சூரியா நடிக்கும் ஜெய் பீம் படம் நவம்பர் 2ஆம் தேதியும், ஜோதிகா மற்றும் சசிகுமார் நடிக்கும் உடன்பிறப்பே படமும் அக்டோபர் 14 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.
- மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இறப்பதற்குமுன் கடைசியாக பாடிய ‘அண்ணாத்த’ படத்தின் பாடலை அக்டோபர் 4 ஆம் தேதி வெளியீட்டுகிறது படக்குழு.