• Thu. Apr 18th, 2024

வாய் கூசாமல் பொய் பேசுபவர் அண்ணாமலை – சாட்டையை சுழற்றிய சவுக்கு

பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து அதன் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பொய்யான தகவல்களை அளித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் பேட்டி அளித்துள்ளார்.

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் பேட்டியின் போது மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கூறியதாவது:-
செய்தியாளர்: தொடர்ச்சியாக திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பாஜக அலுவலகம் தாக்கப்படுகிறது என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறாரே. 15 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் இப்போதுதான் தாக்கப்படுகிறது என்று சொல்கிறாரே?
சவுக்கு சங்கர்: அண்ணாமலை கூசாமல் பச்சைப் பொய்யை பேசக்கூடியவர். 2007-க்குப் பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சியில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றது என்பது அ.தி.மு.க. ஆட்சி ஏதோ அமைதிப் பூங்காவாக இருந்தது என்பதைப் போலவும், தி.மு.க. ஆட்சி வந்தாலே இவர்களுக்கு தீவிரவாதம் தான் வேலை என்று ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க அண்ணாமலை முயற்சிக்கிறார் என்பது இதிலிருந்து உங்களுக்குத் தெரிகின்றதா? அண்ணாமலை பி.ஜே.பியினுடைய ஸ்டேட் பிரசிடெண்ட். யூனியன் ஹோம் மினிஸ்டரி யாருடைய கண்ட்ரோலில் இருக்கிறது?அப்படி இருக்கும்போது, இன்றைக்கு உளவுத்துறையில் இருக்கக்கூடிய ஒரு அதிகாரி, ஒரு பி.ஜே.பி.யின் ஸ்டேட் பிரசிடெண்ட் போனை சட்ட விரோதமாக ஒட்டுக்கேட்டார் என்றால் நாளைக்கு அவருடைய கதி என்னாவது?
அண்ணாமலை என்ன செய்துக்கிட்டு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க அவருடைய போனை எதுக்கு ஒட்டு கேட்கனும்? அவர்கூட இருக்கின்ற அத்தனை பேரும் உளவுத்துறை கிட்ட பேசிக்கிட்டுதானே இருக்கிறாங்க. என்னிடமும் பேசிக்கிட்டு இருக்கிறாங்க, உளவுத்துறையில் பேசமாட்டாங்களா? அவர் என்ன செய்கிறார், யாரை கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்.
அவருடைய கட்சி சென்னை மாவட்ட நிர்வாகி ஒருவரை தலைகீழாக கட்டி தொங்க விட்டுடுவேன் என்று அவர் யாருகிட்டே பேசினார். என்றைக்குப் பேசினார். உள்ளே உள்ள சக பி.ஜே.பி. தலைவர்களோடு. நீங்கள் செய்யும் அரசியல் என்ன? உங்களுக்கும், உங்கள் கட்சியில் உள்ள மற்ற தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் என்ன மோதல்?
அண்ணாமலைக்கு இங்கே உள்ள பி.ஜே.பி. ஐ.டி. விங் சப்போட் செய்ய மாட்டேன் என்கிறது. நமக்கு ஒரு ஐ.டி. விங்கை ஆரம்பிக்கலாம் என்று சொல்லிட்டு, அண்ணா நகரில் அண்ணாமலை ஆரம்பித்த பிரைவேட் ஐ.டி. விங்; இவ்வளவு தகவல்களும் எனக்கே தெரியும்போது, உளவுத்துறைக்கு இது தெரியாதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *