• Thu. Apr 25th, 2024

உத்திரப்பிரதேசம் முதல்கட்ட தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்திக்கும்- அகிலேஷ் யாதவ்

இந்திய அரசியலில் நாடாளுமன்ற ஆட்சி அதிகாரத்தை தீர்மானிப்பதில் உத்திரப் பிரதேசம் பிரதான பங்குவகித்து வருகிறது காங்கிரஸ் கட்சி உத்திரப் பிரதேசத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்பு இன்றுவரை மத்தியில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்ற முடியாமல் இருந்து வருகிறது.

முலாயம்சிங், கன்சிராம் ஆகியோர் கட்சி தொடங்கிய பின்பு உத்திரப் பிரதேச மாநில முதல்வர் பதவியை முலாயம்சிங், மாயாவதி இருவரும் மாறிமாறி கைப்பற்றினார்கள் கடந்த முறை பாஜக ஆட்சியை கைப்பற்றிய பின் உத்திரப் பிரதேசம் மதவாதிகள் ஆதிக்கம் செய்யும் மாநிலமாக மாறியது இந்த சூழ்நிலையில் உத்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜாக, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் பாஜகவுக்கு வெறும் 8 இடங்கள்தான் கிடைக்கும்சமாஜ்வாதி கட்சி- ராஷ்டிரிய லோக் தள் கட்சி கூட்டணி 50 இடங்களில் வெல்லும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.கடந்த சட்டசபை தேர்தலின் போது மேற்கு உ.பி.யில் ஜாட்கள், முஸ்லிம்கள் மிக மோசமான மதமோதல்கள் காரணமாக தனித்தனியே ஒருமுகப்படுத்தப்பட்டனர். அப்போது பாஜகவுக்கு இது சாதகமாக இருந்தது.

2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் குறிப்பாக மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்ட களம், ஜாட்களையும் முஸ்லிம்களையும் பிணைத்திருக்கிறது.ராஷ்டிரிய லோக் தள் கட்சி மேற்கு உ.பி.யில் ஜாட்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தக் கூடிய கட்சியாக ராஷ்டிரிய லோக்தள் கட்சி இருக்கிறது. இந்த கட்சி இப்போது சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

மேலும் ஓபிசி சமூகத்தினர் பெரும் எண்ணிக்கையில் வசிக்கக் கூடிய பகுதி இது. இதனால் மேற்கு உ.பி. தேர்தல் களம், சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணிக்கே சாதகமாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக இந்தியா டுடேவுக்கு அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது உ.பி. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். சமாஜ்வாதி- ராஷ்டிரிய லோக் தள் கூட்டணியையே உ.பி மக்கள் ஆதரிக்கின்றனர். நாங்கள் மக்களுக்கு அளித்து வரும் தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை, ஹத்ராஸ் பலாத்கார சம்பவம் என உ.பி.யில் பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனது. பாஜக எம்.எல்.ஏக்கள் செல்லும் இடங்களில் மக்கள் விரட்டியடிக்கின்றனர். உ.பி.யில் பொதுமக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அதனையே இப்போது தேர்தல் களத்தில் வெளிப்படுத்துகின்றனர். மேற்கு உ.பி.யில் 58 தொகுதிகளில் 50-ல் எங்கள் கூட்டணி வெல்லும்; பாஜகவுக்கு 8 இடங்களே கிடைக்கும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *