• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பெண் குழந்தைகளின் கண்ணியத்தில் கவனம்-பிரதமர் மோடி

Byகாயத்ரி

Jan 25, 2022

தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பெண் குழந்தைகளை மேம்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதற்கு தேசிய பெண் குழந்தைகள் தினம் ஒரு சந்தர்ப்பமாகும். பல்வேறு துறைகளில் பெண் குழந்தைகளின் முன்மாதிரியான சாதனைகளை கொண்டாடும் நாளாகவும் இது உள்ளது.

எங்கள் அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும், பெண் குழந்தைகளை மேம்படுத்துவதற்கும், அவர்களின் சக்தியை வலுப்படுத்துவதற்கும் அதிக முன்னுரிமை அளிக்கிறோம். பெண் குழந்தைகளுக்கு கண்ணியம் மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்வதில் எங்கள் கவனம் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.