• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் தேர்தல்: திமுகவினர் போராட்டம்

Byகுமார்

Mar 4, 2022

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்கான நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. உசிலம்பட்டி நகராட்சியை பொருத்த வரை மொத்தம் 24 உறுப்பினர்கள். ஆளும் தி மு க 12 இடங்களும், காங்கிரஸ் கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். 9 இடங்களில் அதிமுகவும், இரண்டு இடங்களில் அமமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் திமுக உசிலம்பட்டியின் நகர்மன்றத் தலைவருக்கான தேர்தலில் செல்வி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதற்கிடையே திமுகவைச் சேர்ந்த மற்றொரு நகர் மன்ற உறுப்பினரான சகுந்தலா என்பவர் இன்று தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

திமுக தலைமை அறிவித்துள்ள வேட்பாளரை ஆதரிக்காமல் சகுந்தலா தன்னிச்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளார் என குற்றம்சாட்டி செல்வியின் ஆதரவாளர்கள் உசிலம்பட்டி நகர் மன்ற அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.