தென்காசி மாவட்டம், இடைகால் கிராமத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் உழவன் செயலி பயன்பாடு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கம்பனேரி புதுக்குடி கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கடையநல்லூர் நகராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் நெல் வயலில் எலி தடுப்பு முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் அஃபீஃபா ஷரஃப், அனிஷ்மா ஜோஸ், ஆனந்த ஜோதி, அரித்ரா, கார்த்திகா, கஸ்தூரி,சிஜிதா, யுக மாலதி, பொன்வித்யா, பிரியதர்ஷினி ஆகியோர் கலந்துக்கொண்டு செயல் விளக்கம் அளித்தனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், வேளாண்மை கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஆன்ட்ராய்டு போன் மூலம் செயல்படும் உழவன் செயலி மிகவும் பயனுள்ள நிலையில் எங்களது அனுபவங்களையும் பயிற்சி மாணவிகள் கேட்டறிந்து பாடத்திட்டத்தில் அல்லாத பயிற்சிகளையும் நோய் தடுப்பு முறைகள் விவசாய நிலங்களை பண்படுத்தும் விதம் மூலம் இரசாயண உரம் தவிர்த்த பண்டைய கால எரு தொழு உரம் மக்கிய செடி கொடிகள் எரிக் கலை கொழஞ்சி அகத்தி இலைகளை மறுபடியும் வயலில் உரமாக பயன்படுத்தியதையும் கூறினோம். அதை மாணவிகள் குறிப்பெடுத்துக் கொண்டதாக கூறினர்.