• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஒற்றுமை பாதயாத்திரை நிறைவு விழா – 21 கட்சிகளுக்கு காங். அழைப்பு

ByA.Tamilselvan

Jan 12, 2023

காஷ்மீரில் 30-ந் தேதி நடக்கும்,ஒற்றுமை பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் நாடுதழுவிய பாதயாத்திரையை தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக யாத்திரை பஞ்சாபை அடைந்துள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 300 கி.மீ.க்கு மேல் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், இம்மாதம் 30-ந் தேதி யாத்திரை நிறைவடைகிறது. அதில், ராகுல்காந்தி தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். இந்தநிலையில், பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
வெறுப்பு, வன்முறைக்கு எதிராக இடைவிடாமல் போராடி உயிர்நீத்த காந்தி நினைவு நாளில் நடக்கும் நிகழ்ச்சியை மகாத்மாவின் நினைவுகளுக்கு அர்ப்பணிப்பதாக கூறப்பட்டுள்ளது. சிக்கலான இந்த தருணத்தில் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனம் திசை திருப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பாதயாத்திரை வலிமையான குரலாக உருவெடுத்துள்ளது என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.