• Sat. Apr 20th, 2024

குமரியின் தனித்துவமான சிவாலய ஓட்டம்.

தெய்வத்தின் பூமி என்று இன்றும் புகழப்படும் கேரள மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த நிலப்பரப்பு தான் கன்னியாகுமரி மாவட்டம்.
மொழி வழி மாநிலங்கள் என்ற அன்றைய ஒன்றிய அரசின் சட்டத்தாலும்.சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தே குமரி மாவட்ட மக்கள் கேரள மாநிலத்தின் பகுதி என்பதில் இருந்து குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தின் வெற்றியாகவும். 1956 ம் ஆண்டு நவம்பர் 1_ம் நாள் குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்தது. மாநில எல்லைகள் மாறினாலும்.குமரி மக்களின் விழா உரிமைகளை அப்படியே பின்பற்றி வருகின்றனர்.கேரள மக்களின் முக்கிய விழாவான “ஓணம்”இன்றும் குமரி மக்கள் மகிழ்ந்து கொண்டாடும் விழாவாகும்.
குமரிக்கே உரிய தனித்த பெருமை மிகுந்த விழாவாக.சிவராத்திரி இரவு கண் துஞ்சாது இரவு முழுவதும் சிவன் கோயில்களில் நடக்கும் பூஜை என்பது குமரியில் சற்று வித்தியாசமாக சிவாலய ஓட்டம் என்னும் தனித்த சிறப்பு பெற்றது.

முன் சிறை திருமலை மகாதேவர் கோவிலில் தொடங்கும் சிவாலய ஓட்டம்.
திக்குறிச்சி , திர்பரப்பு, திருமலை,திருநெட்டாலம்,திருபன்றியோடு, திருவிதாங்கோடு, திருநந்திகரை பொன்மலை, பண்ணிபாகம், கல்குளம், மேலாங்கோடு
திருவிடைகோடு என்ற 12_சிவன்கோவில்களுக்கும் ஓடி,ஓடி சென்று தரிசனம் செய்யும் இந்த பண்பாடு 18_ம் நூற்றாண்டில் தொடங்கியது இன்று வரை தொடர்கிறது.முதல் சிவன் கோயிலில் தொடங்கி 12_வது சிவன் கோவில்களுக்கு இடைப்பட்ட தூரம் 108 கிலோ மீட்டர் தூரம். ஓடும் களைப்பு தெரியாமல் இருக்க கோபாலா,கோவிந்தா என்ற கோசம் எழுப்பிய படி ஓடும் சிவாலய ஓட்டம் பக்தர்கள் ஓடும் போது உடலில் ஏற்படும் வேர்வையை விசரி கொண்டு வீசும் வழக்கம் தொன்றுதொட்டு இன்று வரை தொடர்கிறது.
குமரியில் மட்டுமே 12 சிவன் கோயில் களுக்கு இடையே உள்ள தூரம் 108_கிலோ மீட்டர் தூரத்தை இரவு முழுவதும் ஓடி சிவராத்திரி விழாவை கொண்டாடுவது என்பது குமரிக்கு மட்டுமே உரிய தனித்த சிவன் வழிபாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *