• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் ‘ரோடு ஷோ’

Byவிஷா

Apr 8, 2024

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்க கலந்து கொள்ளம் ரோடு ஷோ நிகழ்ச்சி நடக்க விருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தென்காசி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனை ஆதரித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் இன்று மாலை 5 மணிக்கு ராஜபாளையத்தில் ‘ரோடு ஷோ’ நடத்துகிறார்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், தென்காசி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஜான் பாண்டியனை ஆதரித்து தென்காசியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரோடு ஷோ நடத்துவதாக அறிவித்து, அதன்பின் இருமுறை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஜான் பாண்டியனை ஆதரித்து தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ராஜபாளையத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் ‘ரோடு ஷோ’ நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் முதல் பஞ்சு மார்க்கெட் வரை 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோடு ஷோ நடத்தி, தென்காசி வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். இதையடுத்து ராஜபாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.