• Thu. Mar 28th, 2024

ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பி வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள்!..

Byமதி

Oct 14, 2021

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடகாலமாக கொரானாவால் ஸ்தம்பித்தது யாருக்கும் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். இதனால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு வருமானம் இல்லாமல் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டவந்தனர்.

தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவி. இங்கு நீரில் குளித்து விட்டு மசாஜ் செய்து விடுபவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு மீன்களை சமையல் செய்து தருபவர்கள், பரிசல் ஓட்டுபவர்கள் என பல இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த ஒன்றரை வருடங்களாக தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்த ஒகேனக்கல், நோய் குறைந்து உள்ளதால் சுற்றுலாவிற்க்கு அரசு அனுமதி வழங்கியது. ஆனால் ஒகேனக்கல்லில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 25,000 கன அடி நீர் வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக அருவியில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.

இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது மனக்குமுறல்களை தமிழக அரசுக்கு கோரிக்கை தந்துள்ளனர். இதில் முக்கியமாக சமையல் செய்து வரும் முத்து என்கின்ற பெண்மணி, ‘இப்ப தான் பத்து நாள் ஆச்சு திறந்து மீண்டும் சமைக்கக் கூடாதுன்னு சொல்றாங்க. சுற்றுலா பயணிகள் வரக்கூடாது என அரசு சொல்வது நாங்க என்ன செய்வதென்று தெரியல. அரசு தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்’ என தெரிவித்தனர்.

பரிசல் ஓட்டுநர் தங்கராஜ் என்பவர் கூறும்போது, அரசாங்கம் எங்களை மீண்டும் தடை செய்து வருகிறார்கள். எங்களுக்கு தடை செய்யாமல் நிரந்தரமாக பணி செய்ய உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

சுற்றுலா பயணியாக வந்த திருநங்கை மௌனிக்க கூறும்போது, நாங்க சந்தோஷமா வந்தோம். ஆனா இங்க தண்ணி அதிகமா வருது யாரும் உள்ளே போகக்கூடாது, குளிக்கக் கூடாது என போலீஸ் சொல்றாங்க. நாங்கள் மிகவும் ஏமாற்றத்தோடு திரும்பி செல்கிறோம் என கூறினார்கள்.

ஆண்களுக்கு மசாஜ் செய்யும் மாது என்பவர், கடந்த ஒன்றரை வருடங்களாக எங்களுக்கு வருமானம் இல்லாமல் தவித்து வந்தோம். சில பேரு உதவி செய்தார்கள். அரசாங்கம் எங்களுக்கு வெறும் 4000 ரூபாய் தந்தது வேறு ஏதும் தரவில்லை. இனியும் தடை செய்தால் எங்க குடும்பத்தை அரசு தான் காப்பாத்தணும் எனக் கூறினார்.

கொரோனா நோய் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் பலத்த மழை. இதனால் இப்பகுதி தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே தமிழக அரசுக்கு உரிய நடவடிக்க எடுக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *