• Mon. Sep 25th, 2023

கேரளா புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உம்மன்சாண்டியின் மகன் வேட்பாளராக அறிவிப்பு..!

கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், மறைந்த உம்மன்சாண்டியன் மகன் சாண்டி உம்மனை வேட்பாளராக அறிவித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் 52 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாக இருந்த உம்மன் சாண்டி அண்மையில் காலமானார். உம்மன் சாண்டி மரணத்தை தொடர்ந்து காலியாக உள்ள புதுப்பள்ளி இடைத்தேர்தலில், உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மனுக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தொகுதி மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், கால ஓட்டத்தில் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினரின் கருத்தாக வலு பெற்றது.
கேரள மாநில காங்கிரஸ் தலைமை நேரடியாக இந்த கருத்து கேட்பதில் ஈடுபடாது. தேர்தல் காலங்களில் நிலவரத்தை ஆய்வு செய்யும் ஒரு பொது தன்னார்வ குழுவிடம், புதுப்பள்ளியில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் நடத்திய கருத்துக் கணிப்பில் சாண்டி உம்மனுக்கு ஆதரவாக பெரும் பான்மை கருத்து எழுந்தது.
வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலியென நாடாளுமன்ற செயலகம் அறிவித்திருந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்த காலத்திற்கு முன்பே நடக்கும் என்ற கருத்தும் பரவலாக உலா வரும் நிலையில், வயநாடு மக்களவைக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை என்ற நிலையில், சட்டென மாறியது கால நிலை என்பது போல், உச்ச நீதிமன்ற ஆணையால் ராகுல்காந்தி வயநாடு மக்களின் பிரதிநிதியாக மீண்டும் நாடாளுமன்றம் சென்று நாடாளுமன்றத்தில் வரவிருக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில், பிரதமர் நரேந்திர மோடியிடமே கேள்வி எழுப்ப இருக்கும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜின் கார்கே (ஆகஸ்ட் 8)ம் நாள் கையெழுத்து இட்டு வெளியிட்டுள்ள கடிதத்தில்..,


கேரள மாநிலத்தின் சட்டமன்ற வரிசை எண் 98 புதுப்பள்ளி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சாண்டி உம்மன் என அறிவித்துள்ளார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயண யாத்திரையில் கன்னியாகுமரி -காஷ்மீர் வரை நடைபயணத்தில் பங்கேற்றிருந்தார் சாண்டி உம்மன். சாண்டி உம்மனை புதுப்பள்ளி இடைத்தேர்தலில் வேட்பாளர் என்ற அறிவிப்பு இரவு நேரத்தில் வெளியான சூழலிலும், மறைந்த தலைவர் உம்மன் சாண்டியின் மீது பற்றுக் கொண்ட பல்வேறு வயதினை உடைய காங்கிரஸ் கட்சியினர், சாண்டி உம்மனிடம் நெருக்கமான நண்பர்கள் கூட்டம், இளைஞர் காங்கிரஸ் கட்சியினர், அந்த இரவே கூட்டமாக அந்த பகுதியில் உள்ள கிறித்தவ தேவாலயங்கள், இந்து கோவில்கள்,மசூதிகளுக்கு சென்று வழி பட்டு நன்றி காணிக்கை செலுத்தியது. கோட்டையம் மாவட்டம் மட்டும் அல்ல ஒட்டு மொத்த கேரளம் மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றது. நீண்ட நெடிய காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தின் வாரிசாக கேரள சட்டமன்றத்திற்குள் அடி எடுத்து வைக்க போகும் இளைஞர் சாண்டி உம்மன்.

Related Post

விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!
காவிரி நதிநீர் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *