மாமன்னன் படம் எனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதால் இனி படங்களில் நடிக்க போவதில்லை என நடிகர், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து பொது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி நான் ஏற்கனவே சொன்னது போல் மாமன்னன் தான் எனது கடைசி படம். இதற்கு மேல் நான் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என பகிரங்கமாக பேசியுள்ளார். ஆனால், அவரது ரசிகர்களும், திமுக வின் உடன்பிறப்புகளும் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து நடிக்க வேண்டும் என கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.