

ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியதற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனத்தை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் ரவியின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயல்பாடுகளைப் போல் தெரிகிறது. அவருக்கு என்னதான் ஆச்சு. அதிகார வரம்பை அறியாமல் செயல்படுகிறாரா? உள்நோகத்தோடு செயல்படுகிறாரா என திருமாவளவன் கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
